விதிகளை மீறி கூடுதல் சுமையுடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு அபராதம்

இந்த சோதனையால் புளியரை முதல் கடையம் சாலையிலும் ஆலங்குளம் சாலையிலும் ஆங்காங்கே வாகனங்களை ஓட்டுனர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்

Update: 2023-03-31 15:00 GMT

புளியரை சோதனை சாவடியில் அதிக பாரத்துடன் சென்ற கனரக வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதமம் விதித்த போலீஸார் 

தென்காசி மாவட்டம், புளியரை சோதனை சாவடி வழியாக தினம் தோறும் 900 க்கும் அதிகமான கன ரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும்,  இதுகனிம வனக்கடத்தலாக மாறி உள்ளதாகவும் கூறி தொடர் புகார் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், தமிழகத்தின் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக ஏராளமான சமூக அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களுக்கு செவி சாய்க்காத மாவட்ட நிர்வாகம் கனிம வளங்கள் கேரளாவிற்கு அதிக அளவில் சட்ட விரோதமாக அதிக பாரங்களை ஏற்றிக் கொண்டு செல்வதை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதிகமான வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் வீடியோக்கள் வைரலாகின.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் சமூக வலைதளங்களில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை கடையத்தில் ஆர்ப்பாட்டமும் நாளை மறு நாள் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.   தினமும் காலை 5 மணி முதல் வாகனங்கள் பக்கத்து மாநிலமான கேரளாவிற்கு அனுப்பபட்டு வந்தன 5 மணி வரை வரிசை கட்டி காத்திருக்கும் கனிம வள லாரிகள் வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் பொது மக்களால் வைரலாக பகிரப்பட்டதால் நேற்று முன் தினம் முதல் காலை 4 .மணிக்கே வாகனங்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் முதல் செங்கோட்டை மற்றும் புளியரை போலீசார் அடங்கிய குழுவினர் திடீரென காலை 4 மணிமுதல் சோதனை சாவடியில் சோதனைகளை அதிகப்படுத்தினர்.கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மறித்து சோதனையிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அதிக அளவு பாரங்களை ஏற்றிக் கொண்டு சட்ட விரோதமாக கனிம வள கடத்தலில் ஈடுபட்ட 13 லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கனிம வளம் கொண்டு செல்லப்படுவதாக வாகனம் ஒன்றிற்கு 25 ஆயிரம் முதல் அதிகப்படியாக 40 ஆயிரம் வரை அபராதம் விதித்து வருகின்றனர். மொத்தமாக அபராதம் 13 வாகனங்களுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை காரணமாக புளியரை முதல் கடையம் சாலையிலும் ஆலங்குளம் சாலையிலும் பல இடங்களில் சோதனைக்கும் அபராதத்திற்கும் பயந்து, ஆங்காங்கே வாகனங்களை ஓட்டுனர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். பல வாகனங்களில் ஓட்டுனர்கள் இல்லாத நிலை காணப்பட்டது.

மேலும், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ள சூழலில், கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News