செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவ தரக்கட்டுப்பாடு குழுவினர் ஆய்வு

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவ தரக்கட்டுப்பாடு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2021-09-01 14:36 GMT

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவ தரக்கட்டுப்பாடு குழுவினர் ஆய்வு மேற்காெண்டு வருகின்றனர்.

செங்கோட்டை அரசு மருத்துவமனை மாநில அளவில் காயகல்ப் முதல் விருதினை பெற்றது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பாக தேசிய மருத்துவ தரக்கட்டுப்பாடு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வுக்குழு மருத்துவமனையை தரம் பிரித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வு இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆய்வு முடிவு மருத்துவமனைக்கு மிகப்பெரிய பலமாகும். இத்தகைய ஆய்வு மருத்துவமனைக்கு சாதகமானால் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேலும் அதிகமான நிதி உதவிகளும், வசதிகளும் பெற்று, மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும்.

இக்குழுவின் தலைவர் டாக்டர் அசோக் குமார் தலைமையில் செவிலியர் அனுஷா உள்ளிட்டோர் தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும், பணியாளர்களும் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் பணியை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News