கேரள மாநில ஐஸ் கிரீம் கம்பெனி குடோனுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சீல்
Ice Cream Godown Sealed கேரள மாநில ஐஸ்கிரீம் கம்பெனிகுடோனுக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சீல் வைத்தார்.;
கேரள மாநில ஐஸ் கிரீம் குடோனை உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
Ice Cream Godown Sealed
தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம் என்கின்ற பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகில் கேரளமாநிலம் முழுவதும் விற்பனையாகும் தனியார் பிரபல ஐஸ்கிரீம் கம்பெனி செயல்பட்டு வருகிறது இந்த கம்பெனியை கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பகுதியைச் சார்ந்த அன்சாரி என்பவர் நடத்தி வருகிறார் இந்த நிலையில் இந்த ஐஸ்கிரீம் கம்பெனியில் சுகாதாரமற். நிலையில் ரசாயன பொருட்களைக் கொண்டு ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்படுவதாகவும் மேலும் தமிழ்நாட்டில் தயாரித்து கேரள மாநில பெயர்களை அச்சிட்டு ஒட்டி இங்கிருந்து அங்கு கொண்டு செல்லப்படுவதாகவும் முறையான அனுமதி இன்றி இந்த ஐஸ்கிரீம் நிறுவனம் இயங்கிவருவதாக தென்காசி வட்டார உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி நாகசுப்பிரமணிக்கு புகார்கள் வந்த நிலையில் அவர் அந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டார்
அப்போது அங்கு சுகாதாரமற்ற நிலையில் உரிய பாதுகாப்பு மற்றும் ஆடைகள் கையுறைகள் உள்ளிட்டவையில் அணியாமல் தரையில் வைத்து ஐஸ்கிரீம் பெட்டிகளை அடுக்கி வைத்திருப்பதும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு ரசாயன பொருட்கள் உள்ளிட்டவைகள் மற்றும் பல்வேறு பெயர்கள் கொண்ட லேபில்களையும் அச்சடித்து தனியாக வைத்திருப்பதையும் அவர் கண்டறிந்தார்.
மேலும் தொடர்ச்சியாக அந்த கம்பெனியின் நிறுவனர் அங்கு இல்லை என்பதாலும் அதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதாலும் பொருட்கள் வைத்திருந்த குடோனுக்கு அவர் சீல் வைத்தார். மேலும் குடோனில் உள்ள பொருட்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அதனை தரங்களை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதால் அதற்கு சீல் வைக்கப்பட்டதாகவும் உரிமையாளர் வந்து உடனடியாக தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் பணியாளர்கள் மட்டும் இருப்பதால் குடோனுக்கு சீல் வைத்த அவர் மீண்டும் ஒரு நாள் சோதனைக்கு வருவதாக தெரிவித்துச் சென்றார். மேலும் இந்த நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட பெயர் ஒன்றும் ஐஸ்கிரீம் தயாரித்து அனுப்பும் பெயர் வேறு ஒன்றும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த முரண்பாடுகள் குறித்து விசாரித்து ஆய்வு செய்யவே சீல்வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.