கடையநல்லூரில் சிலை உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் சிலைகள் உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கடையநல்லூரில் நகர இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
கடையநல்லூரில் நகர இந்து முன்னணி சார்பில் கிருஷ்ணாபுரம் அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் சிலைகளை உடைத்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடையநல்லூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் தமிழரசு தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் கண்டன உரையாற்றினார்.
மத்திய அரசு வழக்கறிஞர்கள் குற்றாலநாதன், சாக்ரடீஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, பாஜக மாவட்டத் தலைவர் ராமராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட பொருளாளர் ராமநாதன், பிரபாரி, மாரி, சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.