ஹிஜாப் விவகாரம்: தென்காசியில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

அச்சன்புதூரில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-03-21 02:53 GMT

அச்சன்புதூரில், ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில், ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து, அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் முகமதியா திடலில் அவுலியா மீராஷா ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் மீரா கனி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News