கடையநல்லூரில் மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு
கடையநல்லூரில் மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு போலீசார் உதவியுடன் சமூக ஆர்வலர்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.;
மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார்.
இதனையடுத்து, கடையநல்லூர் சார்பு ஆய்வாளர் கனகராஜ் தலைமை காவலர் பன்னீர்செல்வம், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்த சேக் உசேன் மற்றும் நீட் பார் சர்வீஸ் நிறுவனர் கோபி ஆகியோர் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட அவரை மீட்டு அன்னை தெரசா ஸ்டார் பவுண்டேஷன் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்தனர்.
காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்களின் இத்தகைய மனிதநேயமிக்க செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.