செங்கோட்டையில் அடிதடியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
செங்கோட்டையில் அடிதடியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி,திருட்டு போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த செங்கோட்டை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த அஜ்மீர் காஜா ஷெரிப் (30), முஸ்தபா கமால் (30) மற்றும் சக்தி பிரபாகரன் (23) ஆகியோர் மீது புகார் எழுந்தது.
அவர்களை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கிருஷ்ணராஜ் அறிவுறுத்தியதன் பேரில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.