தென்காசி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 நபர்கள் கைது

தென்காசி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 நபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-11-21 14:02 GMT

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னத்தம்பி நாடானூர் பகுதியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது.

இதனை தொடர்ந்து  அங்கு விரைந்த பயிற்சி சார்பு ஆய்வாளர் மகாலிங்கம்  பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குருவைய்யா (45), வரதராஜன்(57), ராமையா (30), மணிகண்டன் (47),மாரிகனி(51), ராஜ் (39),கருப்பசாமி (34) ஆகிய ஏழு நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூபாய் 37,200 பறிமுதல் செய்யப்பட்டது

Tags:    

Similar News