கடையநல்லூரில் வன விலங்குகளை வேட்டையாடிய ஐந்து பேர் கைது

நாய்களை வைத்து வன விலங்குக ளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு அலைபேசி மூலம் ரகசிய தகவல் கிடைத்தது

Update: 2023-08-29 03:30 GMT

வனவிலங்குகளை வேட்டையாடியதால் வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட  ஐந்து பேர்

கடையநல்லூர் அருகே வன விலங்குகளை வேட்டை நாய்கள் வைத்து வேட்டையாட சென்ற 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து  1 .25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னக்காடு பீட்டிற்குட்பட்ட மங்களாபுரம் பரம்பு பகுதியில் வன விலங்குகளை நாய்கள் வைத்து வேட்டையாட சென்ற ஐந்து பேர் கைது வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக 1 .25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். நாய்களை வைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு அலைபேசி மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் வணச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் கடையநல்லூர் பிரிவு வனவர் முருகேசன், மேக்கரை பிரிவு வனவர்  அம்பலவாணன், சிறப்பு பிரிவு வனவர் ரவீந்திரன், வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், ராஜா, அய்யாதுரை, மகாதேவன், வேட்டு தடுப்பு காவலர்கள் சுப்புராஜ், கணேசன் ஆகியோர் காசிதர்மம் மற்றும் மங்களாபுரம் பறம்பு பகுதியில் மாலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சின்னக்காடு பீட் எல்லைக்கு உட்பட்ட மங்களாபுரம் பறம்பு பகுதியில் காசி தர்மத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் லட்சுமண குமார் வயது 31, சுப்பையா மகன் பழனிச்சாமி வயது 40, அர்ச்சுனன் மகன் மாடசாமி வயது 62, மூக்கன் மகன் செல்லத்துரை வயது 55, வைரவன் மகன் திருமலை குமார் வயது 42 ஆகியோர் வேட்டை நாய்களுடன் சுற்றி திரிந்தனர்.

அந்த நபர்களை கைது செய்து அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 (9)ன் கீழ் வழக்குப்பதிந்து புலன் விசாரணை செய்ததில் குற்றம் உறுதி செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வன உயிரினங்களை வேட்டையாடும் என்ற குற்றத்திற்காக மாவட்ட வன அலுவலர்  முருகனின் உத்தரவின்படி ஒவ்வொருவருக்கும் தலா 25,000 வீதம் மொத்தம் 1,25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரையும் வன சரக அலுவலர் சுரேஷ் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வன உயிர்களை வேட்டையாடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் அவர்கள் குற்றச்செயலில்  ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரக அலுவலர் சுரேஷ் தெரவித்தார்.

Tags:    

Similar News