கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் முதல் கூட்டம்: கவுன்சிலர்கள் காரசார விவாதம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல் நாள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் விடுபட்ட ஓன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் திமுக அதிக இடங்களில் வென்றது
இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில் ஒரு இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் வென்றது. இதற்காக முதல் நாள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் துவக்கி வைத்து பேசினார்.
இதில் வார்டு வாரியாக பேச அனுமதித்த நிலையில் திரிகூடபுரம் 1 - வது வார்டு கவுன்சிலர் அருணாசலம் என்பவர் முதல் பேச்சிலே முறையாக டெண்டர் விடாமல் பணிகளை துவங்கி பகுதியாக நடைபெற்ற பின்னர் டெண்டர் விடப்படுவதாக பேசினார். அதன் பின்னர் எங்கள் பழமைய தண்ணீர் தொட்டி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதனை உடனாடியாக அகற்ற வேண்டும் என பேசினார். அப்போது பெண் பொறியாளர் அது எந்த ஊரில் இருக்கு என கேள்வி வைத்தார். இந்த சம்பவம் அங்குள்ள கவுன்சிலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அதிகாரிகள் அனைவரும் கூட்டத்தில் முறையாக கலந்து கொள்ளவில்லை என கோரிக்கை வைத்தனர்.
முதல் நாள் கூட்டம் ஆரம்பம் முதல் முடிவும் வரை அதிகாரிகளிடம் கவுன்சிலர்கள் அடுக்கு அடுக்கான கேள்விகளை வைத்ததால் அதிகாரிகள் திகைத்து நின்றனர். அதன்பின் 10வது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்யகலா தீபக் பேசும்போது எனது வார்டில் உள்ள கண்மணியா புரம் பஞ்சாயத்தில் ரோடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளது அதை சரி செய்து சாலை அமைத்து தர கோரிக்கை வைத்தார். அப்போது பேசிய பொறியாளர் மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ரோடு தோண்டப்பட்டுள்ளது குடிநீர் இணைப்பு கொடுத்தவுடன் சாலைகள் சரி செய்யப்படும் என தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.