தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி பற்றி எரியும் காட்டு தீ
தென்காசி மாவட்ட வனப்பகுதியில் பல ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.;
வடகரை அருகே சின்னக்காடு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ பற்றுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல ஏக்கரில் பற்றி எரிந்தது காட்டுத்தீ வனத்துறையினர் இரண்டு நாட்களாக போராடி அணைத்தனர். இதேபோல் நேற்றிரவில் கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட வடகரை பகுதியில் சின்னக்காடு பகுதியில் தீ பற்றியது.
கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் சுமார் 30 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்க போராடினர். இரண்டாவது நாளாக இன்றும் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சுமார் 5 ஏக்கர் பரப்பு, காட்டு தீயால் நாசமாகியது. இரண்டாவது நாளாக போராடி தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.