நிவாரணம் வழங்க தென்காசி விவசாயிகள் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை;

Update: 2021-11-17 09:09 GMT

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ளது சீவநல்லூர். இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி, வெண்டை, சின்ன வெங்காயம், மிளகு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு உள்ளனர். தற்போது நல்ல விளைச்சல் இருந்தும் மழையினால் அறுவடை செய்ய இயலாத நிலை உள்ளது. காய்கறிகள் செடியிலேயே அழுகிய நிலையில் உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி பயிரிட ஏக்கருக்கு ரூ 75,000 முதல் 90,000 வரை செலவாகிறது. தற்போது அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலையில் மழையால் அனைத்து தக்காளிகளும் செடியிலேயே வீணாகி விட்டது. இதுவரை ரூ 75,000 செலவு செய்து ரூ.1500 வரை தான் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் ரூ. 60 முதல் 70 ரூபாய் வரை விலைக்கு வாங்கி பயிர் செய்து உள்ளோம். தினமும் வேலையாட்கள் மற்றும் உரம் போன்றவை என ஒரு லட்சம் வரை செலவு செய்துள்ளோம். சின்ன வெங்காயம் அறுவடை செய்யும்போது ரூ.10 விற்பனையாகியது. இதனால் பந்தளம் அமைத்து சின்ன வெங்காயத்தை பாதுகாத்து வந்தோம். 60 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது சின்ன வெங்காயத்தின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது.

இந்த வெங்காயம் ரூ 50 க்கு மேல் விற்பனை செய்தால்தான் விவசாயிக்கு நஷ்டம் இல்லாமல் இருக்கும். எனவே அரசு மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினர்

Tags:    

Similar News