நாடு முழுவதும் சுதந்திர தினம் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சுதந்திரப் போராட்டத்தில் அறியாத தலைவர்களை அறிந்து அவர்களைப்பற்றிய தகவல்களை வெளிக்கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டன. தென்காசியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இலத்தூர் பகுதியில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். வல்லம் அன்னை தெரசா ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு புத்தக பை, சீருடை, கல்விக்கட்டணம் ஆகியவை தனியார் நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டது.
மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, பாட்டு போட்டி, நடனம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலையும் மதியமும் அறுசுவை உணவு வழங்கி சிறப்பித்தனர். தனியார் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முத்துராஜ் பெரியசாமி, நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் பெரியசாமி, துணை நிர்வாக இயக்குனர் ஆறுமுகராஜா, லிங்கத்துரை, இயக்குனர் கிருஷ்ணன், சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தனியார் நிறுவன நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கல்வி வளர்ச்சிக்கு இவ்வாறு தனியார் நிறுவனங்கள் உதவி செய்யவேண்டும். ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு உயர் கல்வியைத் தொடரும் வகையில் தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தோர் தாமாக முன்வந்து உதவிகள் செய்யவேண்டும். கல்வி வளர்ச்சியே நாட்டின் எதிர்கால வளர்ச்சி.
கோவில்களுக்கு அள்ளிக்கொடுப்பதைவிட கல்விக்கு உதவுவதே கடவுளுக்குச் செய்யும் தொண்டாகும்.