நிபா வைரஸ் எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான புளியரை பகுதியில் சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் நுழையும் அனைவரையும் சுகாதார பணியாளர்கள் வெப்ப பரிசோதனை, கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி உள்ளார்களா, செலுத்தாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை, உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.