செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ப்ரீசர் பாக்ஸ் நன்கொடை

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ப்ரீசர் பாக்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது.

Update: 2023-05-17 03:23 GMT

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ப்ரீசர் பாக்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது.

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஃப்ரீசர் பாக்ஸ் நன்கொடையாக பெறப்பட்டது

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு இணையாக வேறு வசதிகளோடு சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வண்ணம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

இந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களை வைக்க பயன்படும் ஃபிரீசர் பாக்ஸ் தேவைப்பட்ட நிலையில் செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் வேண்டுகோளுக்கிணங்க தொழிலதிபர் காந்தி செல்வின் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பிரிசர் பாக்ஸை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர்ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் தென்காசி மாவட்ட சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதாவிடம் வழங்கினார் .

மேலும் ஒரே நாளில் நான்கு அறுவை சிகிச்சைகள் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டிருந்ததை தென்காசி மாவட்ட சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா பார்வையிட்டார் .மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது விரைவில் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் இரத்த குளிர்சாதன வைப்பறை விரைவில் அமைக்கப்படும் என கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன். மாவட்ட சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அறிவுடை நம்பி ,மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ப்ரீசம் பாக்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டு இருப்பதால் அதிக வாடகை கொடுத்து ப்ரீசர் பாக்ஸ் வாங்க முடியாத ஏழை எளிய மக்கள் இனி இதனை பயன்படுத்தி பயன் அடைவதற்கு வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News