டாஸ்மாக் ஊழியரை மிரட்டும் திமுக ஒன்றிய செயலாளர்

செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் டாஸ்மாக் ஊழியரை மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2021-09-23 14:15 GMT

டாஸ்மாக் ஊழியரை மிரட்டும் ஒன்றியச் செயலாளர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் ரவிசங்கர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைக்கு சென்று அங்கு உள்ள முன்னாள் முதல்வர் படங்களை அகற்ற கூறியும், தமிழக முதல்வர் படத்தை வைக்கக் கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் எனக்கு மாதம்தோறும் கமிஷன் மதுபான கடைகளில் இருந்து தரவேண்டும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.

மேலும் கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியறையில் பாஜகவின் பிரச்சார வாகனத்தை தடுத்து சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் குற்றாலம் காவல் நிலையத்தில் ஒருவரை கடத்தி மிரட்டியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது ரவிசங்கரின் செயல் சமூக வலைதளங்களில் பரவி உள்ளதால் பொதுமக்களிடையேயும், டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்களிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News