கடையநல்லூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகளை கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் கோபால சுந்தர்ராஜ்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் கடந்த 20ம் தேதி முதல் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட தீவிரமாக நடந்தது.
இதில் முதற்கட்டமாக சிறப்பு பணியாக பாப்பான் கால்வாயில் ஓடையில் உள்ள அடைப்புகள் அனைத்தும் ஜேசிபி கொண்டு சுத்தம் செய்து அதனை டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு பாப்பன் கால்வாய் மற்றும் சீவலன் கால்வாய் ஆகிய இடங்களை சுத்தம் செய்யும் பணிகளை கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.
உடன் நகராட்சி ஆணையாளர் பாரிஜான், நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன், நகராட்சி பொறியாளர் ஸ்டான்லி குமார், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா பங்கேற்றனர்.