ஹிஜாப் அணிய ஐகோர்ட்டு தடை: ஐக்கிய ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்
ஹிஜாப்' அணிய ஐகோர்ட்டு தடை: கடையநல்லூரில் ஐக்கிய ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;
பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நேற்று மாலை 5 மணி அளவில் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேட்டை காதர் முகையதீன் குத்பா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஆர் எஃப் சி சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள், இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அனைத்து இஸ்லாமிய இயக்க தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரை நிகழ்த்தினர், இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.