தென்காசியில் கேஸ், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் நூதன போராட்டம்
தென்காசியில் கேஸ், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து போராட்டம்.;
தென்காசியில் கேஸ், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து நூதன போராட்டம் நடத்தினர்.
தென்காசியில் கேஸ் மற்றும் பெட்ரோல் விலையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் வீடுகளுக்கு முன்பு சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து போராட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டர் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக அகர கட்டில் காங்கிரஸ் சிறுபான்மை ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கார்வின் வீட்டு முன்பு சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியினர் கிளங்காடு மணி, செல்வராஜ், சுந்தரையா, பெஞ்சமின், ஸ்டான்லி, ஜாண்பால், அன்சன், புதுமை கலந்து கொண்ட மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.