மன நலம் பாதித்தவர் மீது தாக்கு: நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை

தென்காசி அருகே, மன நலம் பாதித்தவரை தாக்கிய மர்ம நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-01-08 00:45 GMT

முப்பிடாதி

தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியை சேர்ந்தவர், முப்பிடாதி வயது, 28 , தாய் தந்தையை இழந்தவர். இவர் மனம் நலம் பாதிக்கப்பட்டவர். ஜனவரி 6ஆம் தேதி அன்றில் இருந்து இவரை காணவில்லை என்று உறவினர்கள்,  அக்கம் பக்கத்தில் தேடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அருகே உள்ள ஒரு வீட்டில் முப்பிடாதி இருப்பதாக, உறவினர்களுக்கு தகவல் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

உடனானடியாக அவரை, உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  இது குறித்து முப்பிடாதியின் உறவினர்கள் கூறுகையில், இத்தாக்குதலை நடத்தியவர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News