மருத்துவ கலந்தாய்வில் தென்காசி மாணவர்கள் 16 பேருக்கு இடம் ஒதுக்கீடு
தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற 16 பேர் மருத்துவ கலந்தாய்வில் இடம் பெற்றனர்.;
தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற 16 பேர் மருத்துவ கலந்தாய்வில் இடம்பெற்றனர். செங்கோட்டை அரசு பெண்கள் பள்ளியில் மட்டும் அதிகப்படியாக 5 பேர் மருத்துவ இடம் பிடித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் 16 பேர் மொத்தமாக மருத்துவம் பயில தேர்வாகி அவர்களுக்கான கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதில் மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சுரண்டை, வெள்ளாங்குளம், புல்லுக்காட்டு வலசை, குருவிகுளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் அடங்குவர்.
இந்த நிலையில் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 5 மாணவிகளுக்கு மருத்துவ கல்விக்கான இடம் கிடைத்துள்ளது. செங்கோட்டையை சேர்ந்த அஞ்சலக சிறு சேமிப்பு முகவராக பணியாற்றும் கண்ணன் என்பவர் மகள் லோகேஸ்வரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடத்தை பிடித்துள்ளார். அதே பள்ளியில் பயிலும் தட்டச்சராக பணி செய்து வரும் அய்யப்பன் என்பர்மகள் சுபாஸ்ரீ மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பிடித்து தேர்வாகி உள்ளார்.
இந்த நிலையில் மாணவிகள் பெற்றோருடன் ஆசிரியர்களை சந்தித்தனர். இனிப்புகள் வழங்கி மகிழ்வை வெளிப்படுத்தியதுடன் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்தனர் மாணவிகள் தங்களுக்கு அரசு சார்பில் இட ஒதுக்கீடும் தனி பயிற்சி மையத்தில் சிறப்பான பயிற்சியும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள். ஒத்துழைப்பால் மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தனர்.