ஆய்குடி பேரூராட்சி 9வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆய்குடி பேரூராட்சியில் 9வது வார்டில் பாேட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சிந்துமொழி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.;

Update: 2022-02-09 02:23 GMT

ஆய்குடி பேரூராட்சியில் 9வது வார்டில் பாேட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சிந்துமொழி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் பிரசாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆய்குடி பேரூராட்சியில் ஒன்பதாவது வார்டு பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்து மொழி போட்டியிடுகிறார். அவர் இன்று வீடு வீடாகச் சென்று காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது செங்கோட்டை வட்டார தலைவர் கார்வின், மாவட்ட துணைத்தலைவர் கிளங்காடு மணி உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News