அச்சம்புதூர்: அதிமுக வென்றது -திமுக ரகளை

அச்சம்புதூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்.

Update: 2022-03-05 01:43 GMT

நேற்று தமிழகம் முழுவதும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகான தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் அதிமுக 5 இடங்களிலும், அமமுக இரண்டு இடங்களிலும், திமுக 7 இடங்களிலும், சுயச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் டாக்டர் சுசிகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக சார்பில் வாசுதேவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார். பேரூராட்சியின் செயல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அதிகாரி குமார் பாண்டியன் தேர்தல் நடத்தினார்.

இதில் அதிமுகவிற்கு 8 வாக்குகள் பதிவானது. திமுகவிற்கு 4 வாக்குகள் பதிவானது. மூன்று திமுக வேட்பாளர்கள் வாக்களிக்காமல் வெளியேறி விட்டனர். ஒரு வாக்கு செல்லாத வாக்குகள் பதிவானது. இதனைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த சுசிகரன் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுகவினர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது பேரூராட்சி வளாகத்தில் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் இரண்டு வாகனங்களில் உள்ள முகப்பு கண்ணாடி சேதமானது. இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அங்கு இருந்த காவல்துறையினர் செயல் அலுவலரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து கூட்டம் கலைந்து சென்றது.

Tags:    

Similar News