அச்சன்புதூர் அல்-ஹிதாயா மதரஸா 5-ம் ஆண்டு விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

அச்சன்புதூரில் அல்-ஹிதாயா மதரஸாவின் 5ஆம் ஆண்டு விழா. மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.;

Update: 2022-03-31 05:58 GMT

அச்சன்புதூரில் அல்-ஹிதாயா மதரஸாவின் 5ஆம் ஆண்டு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அச்சன்புதூர் அல்-ஹிதாயா மதரஸாவின் 5ஆம் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு. மதரஸா நிர்வாகி நாகூர் கனி தலைமை வகித்தார். சர்தார்முகைதீன் பைஜி முன்னிலை வகித்தார். ஜாபர்அலி பைஜி சிறப்புரையாற்றினார்.

விழாவில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளை மதரஸா நிர்வாகிகள் பைசல் செய்யது அலி பாதுஷா மற்றும் மணக்காட்டுப் பள்ளி இமாம் அப்துல் கனி ராஜா முகமது இமாம் ஆகியோர் வழங்கினர். விழாவில் பெற்றோர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

Tags:    

Similar News