தென்காசி அருகே பன்றி கடித்தது வாலிபர் உயிரிழப்பு
ஆய்க்குடி அருகே பன்றிகள் கடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது;
ஆய்க்குடி அருகே பன்றிகள் கடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே உள்ள கம்பளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி சாமி இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் பணி முடித்து நீண்ட நேரம் வராமல் இருந்த அவரை உறவினர்கள் தேடி சென்றுள்ளனர்.
இரவில் முப்புதரில் மணிச்சாமி இரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார் அவரை மீட்டு சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் அப்போது பரிசோதனையில் அவர் பன்றிகளால் கடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது பன்றி கடித்து இறந்த மணி சாமிக்கு ஒரு மாத கைக்குழந்தை உள்ளது இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.