ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை: விரட்டும் பணியில் வனத்துறையினர்

செங்கோட்டை அருகே உள்ள கரிசல் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்தது அதனை விரட்ட வனத்துறையினர் போராடி வருகின்றனர்

Update: 2024-08-26 14:00 GMT

ஊருக்குள் புகுந்த காட்டு யானை.

ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள கரிசல் குடியிருப்பு கிராமத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் உலா வரும் ஒற்றை யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு வந்த ஒற்றை காட்டு யானையானது திரும்ப செல்லாமல் தற்போது அதே பகுதியில் சுற்றி வரும் நிலையில், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டும் அந்த முயற்சி பலன் அளிக்காமல் யானையானது அந்த குளத்தை சுற்றியுள்ள பகுதியில் உலா வரும் நிலையில், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்குள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

அதேபோல், யானையால் ஒருவர் லேசாக தாக்கி படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு யானையை விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த பகுதி முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News