இறப்பிலும் இணைபிரியாத தம்பதி: செங்கோட்டை அருகே பெரும் சோகம்
செங்கோட்டை அருகே இறப்பிலும் இணைபிரியாத தம்பதியால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சரின் கார் ஓட்டுநர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை காமராஜர் காலணி பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி என்ற துரை. இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தூர்பாண்டியனின் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்த சூழலில், அமைச்சர் இறந்த பிறகு வாடகை கார் ஒன்றை ஓட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி மாயாண்டி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாயாண்டிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைப் பார்த்த அவரது மனைவி கல்யாணி உடனே அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்னதாக இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கவே, அந்த தகவலை கேட்டு அதிர்ச்சடைந்த மாயாண்டியின் மனைவியான கல்யாணி என்பவரும் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
கணவன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.