தென்காசியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடையநல்லூர் பகுதியில் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 10 கிலோ கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் குமந்தாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுபட்ட தும்பைமேட்டை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மருது பாண்டியன்(24), வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் ராஜசெல்வம்(20), கீழப்புதூர் நடுத்தெருவை சேர்ந்த கருத்தப் பாண்டியன் மகன் செல்வகுமார்(26) ,டி.என். புதுக்குடி கற்பகவீதி தெற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் மணிகண்டரவி(24) ஆகியோரை கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜா உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் நான்கு பேர் மீதும் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜா நான்கு நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்தார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அதனை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் இதற்கு அனுமதி வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்,மேற்படி நான்கு நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கான தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கும் மருது பாண்டியன்,ராஜசெல்வம்,மணிகண்டரவி,செல்வகுமார் ஆகியோரிடம் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜா சமர்பித்தார்.