செங்கோட்டை நூலகத்தில் 36வது தேசிய புத்தக கண்காட்சி
செங்கோட்டை நூலகத்தில் நடந்த 36வது தேசிய புத்தக கண்காட்சியை மாவட்ட கல்வி அலுவலர் முனைவர்.சுடலை தொடங்கி வைத்தார்.;
செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட் உடன் இணைந்து 10-11-2021 முதல் 21-11-2021 தேதி வரை நூலகத்தில் வைத்து 36வது தேசிய புத்தக கண்காட்சியை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதன்படி காலை 10 மணிக்கு மாவட்ட கல்வி அலுவலர் முனைவர்.சுடலை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணா முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த புத்தக கண்காட்சியில் அறிவு பதிப்பகம், தாமரை பப்ளிகேஷன்ஸ், நக்கீரன் பதிப்பகம், வானதி பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம், அப்துல்கலாம், இறையன்பு, தி இந்து பதிப்பகம், கற்பகம் பப்ளிகேஷன்ஸ், சங்கர் பதிப்பகம், வைரமுத்து படைப்புகள், அரிகண்ட் பப்ளிகேஷன்ஸ், சுதர்ஸன் பதிப்பகம், மற்றும் போட்டித்தேர்வுக்கான அத்தனை புத்தகங்களும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளனர். அனைத்துப் புத்தகங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி 10% வழங்கப்படும்.
புத்தக கண்காட்சியில் வாசகர் வட்ட நிர்வாகிகள் தலைவர்கள் ராமகிருஷ்ணன், பொருளாளர் தமிழ்தாசன், துணைத் தலைவர் ஆதிமூலம் இணைச் செயலாளர் செண்பக குற்றாலம் மற்றும் செங்கோட்டை வட்டார கல்வி அலுவலர் மேரிகிரேஸ் ஜெபராணி, செங்கோட்டை எஸ்எஸ்.ஏ திட்ட மேற்பார்வையாளர் ராஜேந்திரன், ரோட்டரி கிளப் ஆஃப்தலைவர் சேக் ராஜா ,ரோட்டரி கிளப் ஆஃப் கேலக்ஸி தலைவர் திரு. பொன்னுத்துரை, ஓவிய பயிற்சி பொறுப்பாளர் முருகையா, ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குனர் மாரியப்பன், ராஜ் ராஜ்ஜியம் அறக்கட்டளை இயக்குனர் ரமேஷ், மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டலமேலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்நூலகர் ராமசாமி அவர்கள் நன்றியுரை கூறினார்.