தென்காசி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதியில் வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனையிட்ட போது பேருந்தில் பயணித்த தென்காசியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரிடம் ரூ. 30 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை கைப்பற்றி செங்கோட்டை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். ரூ 35 லட்சம் பணத்தை செங்கோட்டை வட்டாட்சியர் வருமான வரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.