அரிசி ஆலைக்கு கடத்தப்பட இருந்த 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தென்காசி அருகே அரிசி ஆலைக்கு கடத்திச் செல்லப்பட்ட 2,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-06-30 04:37 GMT

அரிசி ஆலைக்கு கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசி.

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேர்ந்தமரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து ஆய்வாளர் ராஜா உத்தரவின்படி சேர்ந்தமரம் சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட போலீஸார், சேர்ந்தமரம் பழைய காவல் நிலையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் 45 மூட்டைகளில் சுமார் 2,000கிலோ ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டிவந்த சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சுடலையை கைது செய்து அவரிடம் இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரிடம் நடைபெற்ற விசாரணையில், சங்கரன்கோவிலில் இருந்து கண்ணன் என்பவர் கீழப்பாவூரில் உள்ள ரைஸ்மில்லில் இறக்குமாறு கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News