காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை. எஸ்பி வழங்கினார்

தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை மாவட்ட எஸ்பி வழங்கினார்.

Update: 2021-06-09 10:26 GMT

காவல்துறையினரின் 15 குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையினை தென்காசி மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கு காவல்துறையின் சேம நல நிதி மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2019-2020 ஆம் ஆண்டு பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கும் நிகழ்ச்சி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கினார். இதில் கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 10,000 ரூபாயும், பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 18,000 ரூபாயும் வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில் காவல்துறையில் பணிபுரியும் உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படும் படி நடந்துகொண்டு உயர் பதவியை அடைய வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். உதவி தொகை பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News