கடையநல்லுார் தொகுதி அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார் .
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடையநல்லூரில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் அய்யாதுரை பாண்டியன் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷீலாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார். அப்போது அவருடன் அமமுக மாவட்ட செயலாளர் பொய்கை மாரியப்பன் மற்றும் எஸ்டிபிஐ கட்சி பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.