கடையநல்லூர் மக்கா நகர் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் மக்கா நகர் பகுதிகளில் பொதுமக்களுக்காக மூன்று வித கோரிக்கை அடங்கிய மனுவை நகராட்சி நிர்வாகத்திடம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் அளித்தனர். இதில் கடையநல்லூர்,ரஹ்மானியாபுரம் 10-வது தெரு பகுதியில் சரிவர குடிநீர் வரவில்லை. முன்பு மேற்கு மலம்பாட்டை தெருவில் இருந்து இப்பகுதிக்கு குடிதண்ணீர் வந்தபோது சரியாக இருந்தது. தற்போது அதை மறித்து கேட் வால்வு போடப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதிக்கு சரிவர குடிநீர் வரவில்லை. இதை முன்பு இருந்தது போல் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ரஹ்மானியாபுரம் 8-வது தெரு மேற்கு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தண்ணீர் குழாய் அமைப்பதற்கு தெருவில் தோண்டப்பட்ட குழி சரிவர மூடாமல் இருப்பதினால் அப்பகுதி மக்கள் நடத்து செல்லவும் வாகனத்தில் செல்லவும் கடும் சிரமமாக உள்ளது. இதையும் சீர் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.அது போல் ரஹ்மானியாபுரம் 9வது தெரு மேற்கு பகுதியில் மின் கம்பத்தில் இரவு விளக்கு அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது?