ஆய்க்குடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் அதிரடி ஆய்வு;
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதிகளில் சென்னை பொது சுகாதார துறை இணை இயக்குநர் மரு.கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு பணிகள் எப்படி நடைபெறுகிறது என ஆய்வு செய்து, அதிகாரிகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்களிடம் தண்ணீரை மூடி வைத்து பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தவும் , டெங்கு வராமல் தடுக்கும் முறை பற்றியும் விளக்கினார்.
ஆய்க்குடி பேரூராட்சியில் சிறப்பாக டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பொன்னாடை போத்தியும் கௌரவித்தார்கள். டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும் , மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், சுயஉதவிக்குழு மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுரை வழங்கினார்கள்.
மேற்படி ஆய்வில் ஒட்டு மொத்த துப்புரவு பணிகள், நிலவேம்பு குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம் மற்றும் கொசு புகை மருந்து அடித்தல் பணிகள் ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் மணிபிரசாத், மாரீஸ்வரி, .கீர்த்திகா முதுநிலை பூச்சியியல் வல்லுநர்கள் இராமலிங்கம், குருநாதன், இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலாஜி , சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், செல்வமுருகன், அழகுராஜா கணேசன், பயிற்சி சுகாதார ஆய்வாளர் சோபனா 3 சுகாதார செவிலியர் ஜெயந்தி, துப்புரவு மேற்பார்வையாளர். ச.தர்மர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.