பைக் -ஆட்டோ மோதி விபத்து, வாலிபர் பலி

Update: 2021-02-24 06:30 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியில் மோட்டார்பைக் மீது லோடு ஆட்டோ மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கரூர் மாவட்டம், ராக்காரன் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் மதியரசு (27). இவரும், அதே மாவட்டம், நல்லிபாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவரது மகன் லோகேஷ் (19) என்பவரும் தென்காசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். வழக்கம் போல் ராஜபாளையத்தில் நேற்று பணியை முடித்துக்கொண்டு தென்காசிக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சொக்கம்பட்டியில் வந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோவின் டயர் திடீரென வெடித்து இவர்களது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மதியரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த லோகேசை சொக்கம்பட்டி போலீசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான மதியரசு உடலை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த மதுரை காந்தி கிராஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டியிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News