தென்காசி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்

Update: 2021-02-18 12:00 GMT

தென்காசி மாவட்டம் ஆய்குடியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் டெங்கு கொசு பரவல் ஏற்பட்டு வருவதை முன்னிட்டு டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார் ‌ அதன்படி திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குற்றாலிங்கம், சென்னை பொதுசுகாதாரம் (ம) நோய் தடுப்புத்துறை இணை இயக்குநர் ஆகியோர் அறிவுரைபடியும் ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் 6 வது வார்டு மெயின்ரோடு , பேச்சியம்மன் கோவில் தெரு மற்றும் இதர தெருக்களில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் மஸ்துார் பணியாளர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையான வீடுவீடாகச் சென்று கொசுபுழு ஒழித்தல், அபேட் மருந்து ஊற்றுதல், கிருமி நாசினி தெளித்தல் மற்றும் ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் நடைபெற்றது.

இப்பணிகளை மாவட்ட மலேரியா அலுவலர் குருநாதன், மருத்துவ அலுவலர் முத்துபிரகாஷ் , பூச்சியியல் வல்லுநர் பாலாஜி , சுகாதார ஆய்வாளர் செல்வமுருகன்,கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விளக்கிய பேருராட்சி நிர்வாக அதிகாரி தங்கள் சுற்றுப்புறங்களை பொதுமக்கள் தூய்மையாக பராமரித்து டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News