புளியரையில் தென்னை மரங்களை பிடுங்கி காட்டு யானைகள் அட்டகாசம்

தென்காசி மாவட்டம் புளியரை பகவதிபுரம் உட்கோணம் பகுதியில் புகுந்த யானைக் கூட்டம் ஒன்று விவசாய தோட்டங்களில் தென்னை, மா உள்ளிட்ட பல மரங்களை வேருடன் புடுங்கியும் கிளைகளை ஒடித்தும் நாசம் செய்தது .;

Update: 2020-12-17 05:24 GMT

தென்காசி மாவட்டம் புளியரை பகவதிபுரம் உட்கோணம் பகுதியில் கடந்த 9ம் தேதி புகுந்த யானைக் கூட்டம் ஒன்று விவசாய தோட்டங்களில் தென்னை, மா உள்ளிட்ட 100 மரங்களை வேருடன் புடுங்கியும் கிளைகளை ஒடித்தும் நாசம் செய்தது . இதனையடுத்து வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவே வனத்துறையினர் வந்து இரண்டு நாட்களாக வெடிவைத்து யானைகளை விரட்டினர் .

இந்நிலையிலையில் புளியரை உட்கோணத்திலிருந்து கிழக்குப் பகுதியான புளியரை பகவதிபுரம் கோரன்குழி பகுதியில் புகுந்த யானை கூட்டம் அந்த பகுதியில் உள்ள வேலு ,பேச்சி நம்பியார், பழனிச்சாமி, சிவசுப்பிரமணியன், வலஜல குமாரி, குருதேவா, கந்தசாமி ஆகியோருக்கு சொந்தமான தென்னந்தோப்புகளில் புகுந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி நாசம் செய்தது. இது குறித்து இப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கும் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர் .

இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் மிகவும் வேதனைஅடைந்துள்ளனர்.விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகாத வண்ணம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அகழிகளை உருவாக்க வேண்டும். மின் வேலிகளை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News