முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை.;

Update: 2022-05-23 06:04 GMT

வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட அந்தோணிராஜ்.

தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை.

தமிழக முதலமைச்சர் வீட்டில் உள்ள தனிப்பிரிவுக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் தொடர்பு கொண்ட மர்மநபர் சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி இதனால் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார் என கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதலமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியதில் இது வெறும் புரளி என தெரியவந்தது.

இதனையடுத்து வெடிகுண்டு விடுத்த நபர் குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள தாட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (34) இவரின் தந்தை ஜெபஸ்டியான் கடந்த 23ம் தேதி இடப்பிரச்சினை தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்ததாகவும் அந்த மனு மீதான உரிய விசாரணை மேற்கொள்ளாத காவல்துறையினரால் விரக்தியடைந்து தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு இரவு போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் அதனை தொடர்ந்து தற்போது அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News