பீடி கம்பெனியை மாற்றுவதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு

Update: 2021-04-22 08:30 GMT

தென்காசி மாவட்டம் கடையம் அருகே 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பீடி கம்பெனியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தில் பீடி சங்க கிளை அமைப்பு கூட்டம் அருணாசலவடிவு தலைமையில் நடைபெற்றது. இதில் பீடி சங்க மாவட்ட பொதுச்செயலாளர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் மகாவிஷ்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடையம் ஓன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பீடி சங்க நிர்வாகிகள் ஆறுமுகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் 40 ஆண்டுகளாக வள்ளியம்மாள்புரத்தில் செயல்பட்ட தனியார் பீடி கம்பெனி கிளையை வடமலைபட்டிக்கு மாற்றுவதற்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு மீண்டும் வள்ளியம்மாள்புரத்தில் கடையை திறந்து வேலை வழங்கிட பீடி கம்பெனி நிர்வாகம், மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் . 2021 ஏப்ரல் முதல் பீடி தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் பஞ்சப்படி உயர்வு அரசாணையின்படி 1000 பீடிக்கு ரூ 9.39 ஆக மொத்தம் ரூ227.24 பைசா உடனே வழங்கிட தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும்.1000 பீடிக்கு தரமான இலை 700கிராம் வழங்கிடவேண்டும். பீடி தொழிலாளர்கள் கூலி உயர்வு முத்தரப்பு பேச்சுவார்த்தையை உடனே துவக்கி பீடி முதலாளிகள் கூலி உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது

Tags:    

Similar News