கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரத்தில் m-Sand கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரத்தில் m - Sand கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆலங்குளத்தில் பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் என 500 க்கும் மேற்ப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரம் என்ற கிராமத்தின் அருகே எம்.சான்ட் கல்குவாரி அமைக்கும் பணிக்கு தனியாரால் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காசிநாதபுரம் கிராம மக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கல்குவாரி அமைக்கும் பணி நடைபெற்றதை தொடர்ந்து கல்குவாரி அமைக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர் , வட்டாச்சியர் ஆகியோருக்கு அனுமதி வழங்க கூடாது என மனு அளித்தனர். எனினும் போதிய நடவடிக்கை இல்லை என இன்று காலை ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே பள்ளி மாணவர்கள், பெண்கள் பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் தாசில்தார் பரிமளா , டி.எஸ்.பி பொன்னரசு ஆகியோர் ஆர்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குவாரி அமைக்கும் பணிக்கு தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை, பொதுமக்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இது சம்பந்தமாக முடிவு எட்டவில்லை என்றால் ஆதார் கார்டு மற்றும் ரேசன் கார்டு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கபபடும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.