கடையம் தோரணமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது;

Update: 2022-06-12 14:53 GMT

தோரணமலை முருகன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமையான வரலாற்று சிறப்புமிக்க தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில்.

சித்தர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் . இந்த ஆண்டின் வைகாசி விசாகத் திருவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலை மலை உச்சியில் உள்ள முருகப்பெருமான் தெய்வானை, வள்ளி மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர், சரஸ்வதி, கிருஷ்ணர், நவக்கிரங்களுக்கும், உற்சவ முருகர், தெய்வானை, வள்ளிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மஹா தீபாராதனைகள் நடத்தப்பட்டு முருகபக்தர்கள் பஜனை குழு சார்பில் முருகக் கோஷம் பஜனை பாடப்பட்டது.

வைகாசி விசாகத் திருவிழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செண்பகராமன் மற்றும் முருக பக்தர்கள் பஜனை குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News