கடையம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

கடையம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-02-28 04:06 GMT
Ganja Crime | Today Theni News

பைல் படம்.

  • whatsapp icon

தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆசிர்வாதபுரம் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சார்பு ஆய்வாளர் சேக்கனா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த துரைசாமி புரத்தைச் சேர்ந்த திருமலை என்பவரின் மகன் சார்லஸ்(40) மற்றும் மேட்டூரை சேர்ந்த சீனி என்பவரின் மகன் செல்வின் துரை (29) ஆகிய இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.

மேலும் அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய லாரி, டிராக்டர் மற்றும் இரண்டு யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News