தென்காசி மாவட்டத்தில் பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், பூலாங்குளம் பகுதியில் கிருஷ்ணராம் என்ற நபரை கடந்த 26 ம் தேதி அன்று புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தற்காக போலீசார் கைது செய்தனர். போலீஸ் தன்னை கைது செய்ததற்கு சமுத்திரவள்ளி என்பவரின் கணவர் தான் காரணம் என கருதி சமுத்திரவள்ளியை அவதூறாக பேசி கிருஷ்ணராம் கொலை மிரட்டல் விடுத்தாராம்.இதுகுறித்து சமுத்திரவள்ளி ஆலங்குளம் போலீசில் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கிருஷ்ணராம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.