ஆலங்குளம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருட்டு: தந்தை, மகன் கைது
ஆலங்குளம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருடியது தொடர்பாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.;
தென்காசி மாவட்டம், V.K. புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுநீர்குளத்தில் வசித்து வரும் இசக்கியம்மாள் என்பவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 24 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து இசக்கியம்மாள் V.K புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் அன்னலட்சுமி பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடி அதை, உடனே அடகு கடையில் அடகு வைத்து டிவி, செல்போன் போன்றவற்றை வாங்கிய அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(47) மற்றும் அவரது மகன் முத்து கனி (25) ஆகிய இரண்டு பேர் வாங்கியுள்ளனர்.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டன.