ராமநதி அணை கரையோர மக்களுக்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
ராமநதி அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால் கரையோர மக்களுக்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.;
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மலையும் அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் கடையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையானது அமைந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் பெய்து வரக்கூடிய தொடர் கனமழை காரணமாக அணையானது தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக அணையானது முழு கொள்ளளவை எட்டப்பட்டுள்ள நிலையில் உபரிநீராக 100 கன அடி தண்ணீரானது வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இராமநதி செல்லும் கிராமங்களான கடையம், கீழக்கடையும், ராவண சமுத்திரம், பொட்டல் புதூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எவரும் நதி நீர் செல்லக்கூடிய வழித்தடத்தில் நீராடுவதற்கோ, துணி துவைப்பதற்கோ, விவசாய பணிகளுக்கு செல்ல வேண்டாம்.
மேலும் சுற்றுலா பயணிகளும் எவரும் நீராடச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.