கடையநல்லூரில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
கடையநல்லூரில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கடையம் வட்டார அளவிலான மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் கடையம் சத்திரம் பாரதி தொடக்க பள்ளியில் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியன இணைந்து நடத்திய இம் முகாமை கீழ கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜெயப்பிரகாஷ், வட்டார வள மைய மூத்த ஆசிரியர் பயிற்றுநர் சுப்பு முன்னிலை வகித்தனர்.
மனநல மருத்துவர் , எலும்பு மூட்டு மருத்துவர், கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். இம்முகாமில் மருத்துவச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல், தேசிய அடையாள அட்டைக்கான UDID பதிவு மற்றும் ஆலோசனை, இலவச ரயில் மற்றும் பேருந்து பயண சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு, உதவித்தொகைக்கான பதிவு போன்ற சேவைகள் வழங்கப்பட்டது.
உபகரணங்கள் தேவைப்படும் மாற்று திறனாளிகளுக்கு மற்றும் வீல் சேர் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு தேநீர், சிற்றுண்டி, மதிய உணவு ,பேருந்து கட்டணம் ஆகியவை வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்கம் , மகேஷ் குமார், சரிபாள் பீவி சிறப்பு ஆசிரியர்கள்ராஜ மனோகர் சிங், ஆலிஸ் ஸ்டெல்லா, ஜாஸ்மின், முருக லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.