சோலைச்சேரி டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்
சோலைச்சேரி டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சோலைச்சேரி டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, மருத்துவ முகாமின் நோக்கம், தமிழக அரசு வழங்கும் மருத்துவ சேவைகள் மற்றும் வசதிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், குறித்து பேசி அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதுடன் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடித்தல் குறித்து பேசினார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு பொது மருத்துவம், மகளிர், மற்றும் குழந்தைகள் நலன், கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் எலும்பு முறிவு, தோல், பல், சித்தா, இதயம், உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டன. ஸ்கேன், இஜிஜி, இரத்த பரிசோதனைகளும் செய்யப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் குத்தாலராஜ், வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் கங்காதரன் ஆகியோர் செய்திருந்தனர்.