ஆலங்குளம் அருகே கொடிய விஷப்பாம்பு கடித்து ஒருவர் உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே கடங்கனேரி கிராமத்தில், விஷப்பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்தார்.;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கனேரி கிராமத்தை சார்ந்தவர் முத்துராஜ் (29),விவசாயி. இவர் நேற்று மதியம் தோட்டத்தில் புல் அறுக்க குடும்பத்துடன் சென்றுள்ளார். புல் அறுத்துக் கொண்டு இருந்த போது, எதிர்பாராதவிதமாக, கொடிய விஷப் பாம்பு ஒன்று, இவரை கடித்துள்ளது.
உயிருக்கு போராடிய நிலையில், அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.