அரசுபுறம் போக்கு நிலங்களில் தனியார் காற்றலை மின் கம்பங்கள் அகற்றம்

அரசுபுறம் போக்கு நிலங்களில் தனியார் காற்றலை மின் கம்பங்கள் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஷ் தலைமையில் அகற்றும் பணி நடைப்பெற்றது.

Update: 2023-01-29 06:05 GMT

முத்தம்மாள்புரம் கிராமத்தில் அரசுபுறம் போக்கு நிலங்களில் தனியார் காற்றலையினர் நடபட்ட மின் கம்பங்கள் அகற்றப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்களை தனியார் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சில இடங்களில் ஆக்கிரமிப்பு குறித்து வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மேலும் அரசு அதிகாரிகளுக்கு அரசின் புறம்போக்கு நிலங்களை சர்வே செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் முத்தம்மாள்புரம் கிராமத்தில் அரசுபுறம் போக்கு நிலங்களில் தனியார் காற்றலையினர் ஆக்கிரமிப்பு செய்து மின்கம்பங்கள் நடப்பட்டது.

அதனை பொதுமக்கள் புகார் அளித்துவந்த நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டார் உடனடியாக விரைந்து சென்று வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஷ் தலைமையில் மின்கம்பங்கள் அகற்றும் பணி நடைப்பெற்றது.

இப்பணியில் மண்டல துணை வட்டாட்சியர் முருகன், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊத்துமலை காவல் ஆய்வாளர் சுரேஷ், ஊத்துமலை குறுவட்ட ஆய்வாளர் ராமர், முத்தம்மாள்புரம் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் கிராம உதவியாளர் செல்வக்குமார் உடனிருந்தனர். 

Tags:    

Similar News